தங்கம் போன்ற மஞ்சள் நிற வாலுடன், வெள்ளை ஆடை அணிந்து மரத்தின் கிளைகளுக்கிடையே ஒளிந்திருந்த ஹநுமானைப் பார்த்து முதலில் சீதை குழப்பமும், திகைப்பும் அடைந்தார்.
உருக்கிய தங்கம் போன்ற நிறம் கொண்ட கண்களுடைய அந்த வானரரின் உடல் அசோகமரத்தில் பூத்த மலர் போல் தோற்றமளித்தது.
அவர் மிகவும் பணிவுடன் இருந்ததையும் தனக்கு இசைவானவற்றை அவர் பேசியதையும் சீதை கவனித்தார்.
வியப்பு, ஐயம் இரண்டும் ஒருங்கே கொண்டவராக சீதை சிந்திக்க ஆரம்பித்தார்.
பெரிய, அசாதாரணமான, அச்சமூட்டுவதாக இருந்த அந்தக் குரங்கின் வடிவத்தைக் கண்டதும், அவர் அதை ஒரு கெட்ட சகுனம் என்று நினைத்து, மீண்டும் மனதில் அச்சமும், கிலேசமும் கொண்டார்.
அவர் பரிதாபமாக அழத் தொடங்கினார். துயரத்தில் தோய்ந்திருந்த அழகான, உயர்வான பெண்ணான சீதை விம்மிக்கொண்டே 'ராமா! ராமா! லக்ஷ்மணா! லக்ஷ்மணா!' என்று மெல்லிய குரலில் முனகத் தொடங்கினார்.
தன் முன் பணிவுடன் நின்று கொண்டிருந்த அந்த உயர்ந்த வானரத்தைப் பார்த்த அழகு நிறைந்த மிதிலை நாட்டு இளவரசி அது ஒரு கனவாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினார்.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அவர், வானர அரசனின் அமைச்சரும், தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிபவரும், மிக அறிவுள்ளவரும், பெரிய, குவிந்த முகம் உடையவருமான வாயுகுமாரரைப் பார்த்தார்.
அவரை நன்றாகப் பார்த்த சீதை மயக்கமடைந்து இறந்தவர் போல் ஆனார். விரைவிலேயே மயக்கம் தெளிந்த அவர் இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தார்:
"ஐயோ! சாஸ்திரங்களால் கெட்ட சகுனம் என்று கூறப்பட்டுள்ள இந்த அழகற்ற குரங்கின் தோற்றத்தை என் கனவில் நான் பார்க்கிறேனே! ராமரும், லக்ஷ்மணரும் என் தந்தை ஜனகரும் நலமுடன் இருப்பார்களாக!
"ஆனால் நான் பார்த்தது கனவாக இருக்க முடியாது, ஏனெனில் துன்பங்களாலும், சோகத்தாலும் மனம் வருந்தியும், நிலவு முகம் கொண்ட ராமரிடமிருந்து பிரிந்ததால் வருத்தத்துடனும் இருக்கும் எனக்கு உறக்கமே வருவதில்லையே!
"மனதில் எப்போதும் நான் ராமரின் பெயரையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, அவர் பெயரையே நினைத்துக் கொண்டும், அவர் புகழைப் பாடிக்கொண்டும் இருப்பதால், அவர் புகழ் பேசப்படுவது போன்ற உணர்வுகள் எனக்குத் தோன்றி அவற்றை இவ்வாறு புரிந்து கொள்கிறேனோ என்னவோ!
"அவரைப் பற்றிய கவலையால் துயரடைந்த என் மனம் அவருடைய நினைவில் முழுமையாக ஈடுபட்டு, நான் எப்போதும் அவரைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறேன். எனவே என் மனதில் நிரம்பியிருக்கும் எண்ணங்களுக்கு ஏற்ற விஷயங்களை நான் பார்ப்பதாகவும், கேட்பதாகவும் உணர்கிறேன்.
"இது என் மனப்பிரமைதான் என்று நினைக்கிறேன். ஆனால் சிந்தித்துப் பார்த்தால், என் முன் ஒரு உருவம் எப்படித் தோன்ற முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. என் முன் நின்று பேசிக் கொண்டிருக்கும் ஒரு உருவத்திடமிருந்து இந்த வார்த்தைகளை நான் தெளிவாகக் கேட்கிறேன். அவருடைய நோக்கம் என்னவாக இருக்கும்?

"இந்திரனுக்கும், பிரஹஸ்பதிக்கும், பிரம்மாவுக்கும், அக்னிக்கும் வணக்கம்! இந்தக் குரங்கு என் முன் பேசியது உண்மையாக இருக்கட்டும்! வேறு விதமாக இல்லாமல் இருக்கட்டும்!
இந்த சர்க்கத்தின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment