"ஓ, மேலான பெண்மணியே! ராமர் பற்றியும், லக்ஷ்மணர் பற்றியும் உங்களிடம் தகவல் சொல்ல, ராமரின் ஆணையால் இங்கு வந்திருக்கும் ஒரு தூதுவன் நான்.
"விதேஹ நாட்டு இளவரசியே! ராமபிரான் நலமாக இருக்கிறார். தான் நலமாக இருப்பது பற்றித் தங்களிடம் தெரிவிக்கும்படி அவர் எனக்கு ஆணையிட்டுள்ளார்.
"மேலான பெண்மணியே! தசரதரின் புதல்வரும், வேதங்களை அறிந்தவர்களில் சிறந்தவரும், வேதங்களைக் கையாளும் அதே திறமையுடன் பிரம்மாஸ்திரத்தையும் கையாளக் கூடியவருமான ராமர் உங்கள் நலம் பற்றி விசாரித்தார்.
"மேலும், உங்கள் கணவருக்குப் பிரியமானவரும், பெரும் துயரால் வெந்து கொண்டிருப்பவருமான சக்தி வாய்ந்த லக்ஷ்மணரும் மரியாதையுடன் கூடிய தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறார்."
அந்த இரு உயர்ந்த மனிதர்களும் நலமாக இருப்பதை அறிந்து அந்தப் பெண்மணி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தவராக ஹனுமானிடம் கூறினார்:
"எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! எவருக்குமே நீண்ட காலம் கழித்தாவது ஒரு மகிழ்ச்சியான நேரம் வரும் என்ற பொதுவான நம்பிக்கை என் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது போலிருக்கிறது!"
சீதையை நேரே பார்த்ததில் ஹனுமான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருவர் மனதிலும் நம்பிக்கை உருவாகி இருவரும் தங்களுக்கிடையே உரையாடத் தொடங்கினர்.
சோகத்தில் ஆழ்ந்திருந்த சீதையின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் ஹனுமான் அவர் அருகில் வந்தார். ஹனுமான் அவருக்கு அருகில் வர வர சீதைக்கு அவர் மாறுவேடத்தில் வந்திருக்கும் ராவணனோ என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.
'இது நிச்சயம் மாறுவேடத்தில் வந்திருக்கும் ராவணன்தான். இவரிடம் இது போல் உரையாடியது எத்தனை முட்டாள்தனம்!'
அழகிய உருவம் கொண்ட சீதை அசோக மரத்தைப் பிடித்துக் கொண்டிருந்த தன் கையை எடுத்து விட்டு, ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியவராகத் தரையில் அமர்ந்தார்.
அவர் பயந்து போனதையும், பயத்தினால் எழுந்த சந்தேகத்துடன் இருந்ததையும் கண்ட வீரம் மிகுந்த ஹனுமான் அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.
ஆனால் பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த சீதை தன் கண்ணைக் கூடத் திறக்கவில்லை.
அழகானவரும், இனிய குரல் உடையவருமான சீதை அந்த வானரர் நீண்ட நேரம் தன் காலடியில் விழுந்து கிடப்பதைக் கண்டு மனதில் சற்று துணிவு வரப் பெற்றவராக அவரிடம் இவ்வாறு கூறினார்:
"நீ அந்தத் தீயவனான ராவணனாக இருந்தால், நீ என் மனதுக்கு அதிகம் வலியைத்தான் ஏற்படுத்துகிறாய். நீ எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஜனஸ்தானத்தில் உன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு துறவி போல் தோன்றிய அதே ராவணன்தான் நீ.
"ஓ, எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடிய அரக்கனே! பயத்தினாலும், உணவு உண்ணாததாலும் மெலிந்து போயிருக்கும் எனக்கு நீ வலி ஏற்படுத்துகிறாய். இது சரியல்ல.
"ஆனால் என் சந்தேகங்கள் தவறாகக் கூட இருக்கலாம். ஏனெனில் உன்னைப் பார்க்கும்போது என் மனதில் சற்று மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓ, சிறந்த வானரமே! நீ உண்மையாகவே ராமரின் தூதராக இருந்தால் உனக்கு நன்மை உண்டாகட்டும்.
"ராமரைப் பற்றிய அனைத்தையும் கூறும்படி நான் உன்னைக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அவரைப் பற்றிக் கூறு. ஒரு ஆற்றின் ஓட்டம் அதன் கரைகளைக் கவர்வது போல் நீ என்னைக் கவர்கிறாய். என் வாழ்க்கையின் தலைவரான ராமரின் பெருமையைப் பற்றிப் பேசு.
"ஆச்சரியங்களின் ஆச்சரியமே! ஒரு கனவு கொடுக்கக் கூடிய மகிழ்ச்சியான அனுபவங்களைக் கண்டு நான் வியக்கிறேன். இவ்வளவு தூரம் தூக்கி வரப்பட்ட நான் ராமர் ஒரு குரங்கை தூதுவராக அனுப்பியதாகக் கற்பனை செய்து கொள்கிறேன்.
"வீரரான ராமரை லக்ஷ்மணருடன் கனவில் பார்த்தால் கூட, அதுவே என் மனச்சோர்விலிருந்து என்னைப் பெருமளவு விடுவிக்கும். ஆனால் கனவுகள் கூட எனக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கின்றனவா?
"ஆனால் இதை ஒரு கனவு என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில், கனவில் ஒரு குரங்கைப் பார்ப்பதன் மூலம், ஒருவர் தன் சூழ்நிலைகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. மாறாக, எனக்கு இப்போது கிடைத்திருப்பது ஒரு நல்ல செய்தி.
"இது ஒரு கற்பனையான விருப்பமாக இருக்கலாம். இது ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் தூண்டப்பட்டிருக்கலாம், அல்லது இது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அன்பினால் உருவாக்கப்பட்டிருக்கலாம். அல்லது பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர் போல் வெறும் மாயையாக இருக்கலாம்.
"ஆனால் இது பைத்தியக்காரத்தனமாகவோ, குழம்பிய மனத்தின் விளைவாக ஏற்பட்டதாகவோ இருக்க முடியாது, ஏனெனில் நான் யார் என்பதையும், இந்த வன வானரம் யார் என்பதையும் என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது."
இவ்வாறு சாதகமான, மற்றும் பாதகமான அம்சங்களைப் பற்றிச் சிந்தித்த பின், அரக்கர்கள் எந்த வடிவத்தையும் எடுக்கக் கூடியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்ட சீதாதேவி, தன் முன்னால் நிற்கும் குரங்கு, அரக்கர்களின் அரசனான ராவணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு மீண்டும் வந்தார்.
இந்த எண்ணத்தை மனதில் இருத்தியபடி, அழகிய தோற்றம் கொண்ட சீதை எதுவும் பேசாமல் அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வாயு புத்திரனான ஹனுமானால் சீதையின் மனக் குழப்பத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் இன்னும் ஆறுதலான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார்:
"ராமர் இப்படித்தான் இருப்பார்: அவர் சூரியனைப் போல் ஒளி மிகுந்தவர். சந்திரனைப் போல் அனைவருக்கும் சுகம் அளிப்பவர். குபேரனைப் போல் எல்லா செல்வங்களுக்கும் சொந்தக்காரர்.
"உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். விஷ்ணுவைப் போல் எல்லா சக்திகளையும் பெற்றவர். பிருஹஸ்பதி போல் உண்மையானவர். இனிமையாகப் பேசக் கூடியவர்.
"மன்மதனைப் போல் காண்பதற்கு அழகான தோற்றம் கொண்டவர். கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவார். எதிரிகளுக்கு பயமாக விளங்குபவர். தேரில் அமர்ந்து போர் செய்வதில் சிறந்த திறமை படைத்தவர். உலகில் உள்ள குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.
"உலகின் நலம் யாருடைய தோள்களின் வலுவின் மீது நிற்கிறதோ அந்த ராமர் தன் ஆசிரமத்திலிருந்து தொலைவிலிருந்த மாயமானால் ஈர்க்கப்பட்டார். அவர் இல்லாதபோது தாங்கள் ராவணனால் கடத்திச் செல்லப்பட்டீர்கள். அந்த ராவணன் விரைவிலேயே அழிவான். நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.
"எந்த ராமரின் கடும் கோபத்துடன் செலுத்தப்படும் அம்புகள் ராவணனைக் கொல்லப் போகின்றனவோ, அந்த ராமர் என்னை தூதுவனாக அனுப்பி இருக்கிறார்.
"உங்கள் பிரிவினால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர் தன்னுடைய நலம் பற்றித் தங்களிடம் தெரிவிக்கும்படி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.
"சுமித்ரையின் புதல்வரும், எல்லோருக்கும் மகிழ்ச்சியளிப்பவருமான வீரர் லக்ஷ்மணர் உங்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்து, உங்கள் நலம் பற்றி விசாரிக்கிறார்.
"ஓ, பெண்மணியே! வானர அரசரும் ராமரின் நண்பருமான சுக்ரீவரும் உங்கள் நலம் குறித்து விசாரித்து, உங்களுக்குத் தன் மரியாதையைத் தெரிவிக்கிறார்.
"லக்ஷ்மணர் மற்றும் சுக்ரீவருடன் சேர்ந்து ராமர் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அரக்கப் பெண்கள் மத்தியில் நீங்கள் இன்னும் உயிருடன் இருப்பது ஒரு அதிர்ஷ்டவசமான விஷயம்தான்.
"விரைவிலேயே நீங்கள் கோடிக்கணக்கான வானரர்கள் மத்தியில் ராமரையும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரையும், அளவற்ற ஆற்றல் கொண்ட சுக்ரீவரையும் சந்திக்கப் போகிறீர்கள்.
"கடலைக் கடந்து இலங்கையை அடைந்த நான் சுக்ரீவரின் அமைச்சரான ஹனுமான். என் ஆற்றல் மூலம் என் கால்களை ராவணனின் தலையில் வைப்பது போல், கடல் கடந்து உங்களைச் சந்திக்க, இலங்கைக்கு வந்திருக்கிறேன்.
"ஓ, பெருமை வாய்ந்த பெண்மணியே! என்னைப் பற்றி உங்கள் மனதில் இருக்கும் ஐயங்களையும், சந்தேகங்களையும் விரட்டி விடுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்."

No comments:
Post a Comment