உயர்ந்தவரான ஹனுமான் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், தெய்வாம்சம் பொருந்தியவராகத் தோற்றமளித்த சீதை மிகவும் திருப்தியுடன் அந்த வாயு புத்திரரிடம் கூறினார்:
"ஓ, வானரரே! இவ்வளவு இனிமையான சொற்களைப் பேசிய உன்னைப் பார்த்ததும், பாதி முளைத்த விதை மழையினால் புத்துயிர் பெறுவது போல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
"சோக நெருப்பில் வாட்டி எடுக்கப்பட்டுள்ள நான் வீரம் மிகுந்த ராமரை விரைவில் சந்தித்து என் விருப்பம் நிறைவேறும் வகையில் என் சார்பாக நீ பொருத்தமான விதத்தில் செயல்பட வேண்டும்.
"வானர சேனையின் தலைவரே! ஒரு புல்லினால் காகத்தின் கண்ணைப் பறித்த சம்பவத்துடன் கூட, நீ என்னைச் சந்தித்ததற்கு அடையாளமாக நான் இப்போது சொல்லப் போவதையும் சொல்ல வேண்டும்.
"ஒரு நாள் என் நெற்றிப் போட்டு மங்கலாகி மறைத்து விட்டபோது நீங்கள் விளையாட்டாக என் நெற்றியில் ஒரு சாயப்பொட்டை வைத்தீர்கள்.
"இந்திரனுக்கும், வருணனுக்கும் சமமானவரும், வீரத்துக்குப் பெயர் பெற்றவருமான நீங்கள், சீதை உங்களிடமிருந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டு அரக்கர்களுக்கு நடுவில் வசிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதை எப்படிப் பொறுத்துக் கொள்கிறீர்கள்?
"குற்றமற்றவரே! இந்த தெய்வீகமான மணி என்னால் மிகவும் கவனத்துடன் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் துயரத்தினால் பீடிக்கப்படும்போது, அதைப் பார்த்துக்கொண்டு, உங்களையே பார்ப்பது போல் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்று வந்தேன்.
"மகிழ்ச்சியை அளிக்கும் சக்தி பெற்ற, கடலில் பிறந்த இந்த மணியை இப்போது நான் உங்களுக்கு அனுப்புகிறேன். இனிமேல் நான் துயரப்படும்போது, இந்த மணியினால் கிடைக்கும் ஆறுதல் கூட இல்லாமல் என் உயிரை வைத்திருக்கும் சக்தி எனக்கு இல்லை.
"தாங்க முடியாத துயரத்தைப் பொறுத்துக் கொண்டும், அரக்கிகளின் கொடுரமான, துளைத்தெடுக்கும் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டும், உங்களுக்காக நான் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறேன்.
"எதிரிகளை அழிப்பவரே! அரசர்களின் வழி வந்தவரே! இன்னும் ஒரு மாதத்துக்கு நான் என் உயிரை வைத்திருப்பேன். அதற்குப் பிறகு, உங்களுடன் பிரிந்த நிலையில் நான் உயிருடன் இருக்க மாட்டேன்.
"இந்த அரக்கர்களின் அரசன் மிகவும் கொடூரமானவன். என் விஷயத்தில் அவனுக்கு இருக்கும் மனநிலை முறையற்றது. நீங்கள் இங்கே வருவது தாமதமாகும் என்று தெரிந்தால், ஒரு கணம் கூட நான் உயிருடன் இருக்க மாட்டேன்."
"விதேஹ நாட்டு இளவரசியின் அழுகையுடன் கூடிய இந்த வார்த்தைகளைக் கேட்ட வாயு தேவரின் அற்புதமான புதல்வரான ஹனுமான் அவரிடம் மீண்டும் கூறினார்.
"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்களிடம் நான் உண்மையைக் கூறுகிறேன். உங்கள் துயரத்தை நினைத்து ராமர் தனது எல்லா ஈடுபாடுகளையும் விட்டு விட்டார். ராமர் இவ்வாறு துயரத்தில் மூழ்கி இருக்கும்போது லக்ஷ்மணரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
"ஓ, உயர்ந்த பெண்மணியே! அதிர்ஷ்டவசமாக நீங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். இது இனியும் துயரப்படுவதற்கான நேரமல்ல. உங்கள் துயரத்தின் முடிவை நீங்கள் உடனே பார்ப்பீர்கள்.
"இந்த இரண்டு குற்றமற்ற, வீரம் மிகுந்த இளவரசர்களும் உங்களைப் பார்க்க வேண்டும் என்ற அவர்களுடைய பெரும் ஆவலால் இந்த இலங்கையைச் சாம்பலாக்கப் போகிறார்கள்.
"ஒ அழகிய பெண்மணியே! ரகுவம்சத்தைச் சேர்ந்த இந்த இரண்டு இளவரசர்களும் ராவணனையும் அவன் ஆதரவாளர்களையும் போரில் அழித்து, உங்களைத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் போவது உறுதி.
"குற்றமற்றவரே! ராமருக்கு அடையாளமாக விளங்கி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வேறு ஏதாவது பொருள் இருந்தால, தாங்கள் அதையும் என்னிடம் கொடுக்கலாம்.
அப்போது சீதை ஹனுமானிடம் சொன்னார்; ஓ, வீரரே! உன்னிடம் நான் கொடுத்திருக்கும் அடையாளச் சின்னமான என்னுடைய மணியே ராமர் மனதில் உன் வார்த்தைகள் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தும்.
அந்த மணியைப் பெற்றுக் கொண்டு விட்ட உயர்ந்தவரான அந்த வானரத் தலைவர் இப்போது சீதையை வணங்கி விட்டு, கிளம்புவதற்கு அவருடைய உத்தரவை எதிர்பார்த்து நின்றார்.
தன் உருவத்தைப் பெரிதாக்கிக் கொண்டு தாவிச் செல்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்த ஹனுமானிடம், மிகவும் துயரமான சூழலில் சிக்கிக் கொண்ட ஜனகபுத்திரி, கண்ணீர் பெருக, தடுமாற்றத்துடன் வந்த வார்த்தைகளைக் கூறினார்;
"ஓ, ஹனுமான்! சிங்கம் போன்ற சகோதரர்கள் ராம லக்ஷ்மணர்களையும், சுக்ரீவரையும், அவருடைய அமைச்சர்களையும் மற்ற அனைவரையும் நான் அன்புடன் கேட்டதாகச் சொல்.
"ஓ, உயர்ந்த வானரரே! உங்கள் இடத்துக்குச் சென்றதுமே, என்னுடைய ஆழமான துயரம் பற்றியும், இந்த அரக்கர்கள் எனக்கு இழைக்கும் அவமானங்களைப் பற்றியும் ராமரிடம் எடுத்துச் சொல். உன் திரும்பிச் செல்லும் பயணம் எந்தத் தடையும் இல்லாததாக இருக்கட்டும்."
சீதை தன்னை உண்மையான தூதுவராக ஏற்றுக்கொண்டது பற்றியும், தன் நோக்கம் நிறைவேறியது பற்றியும் மகிழ்ச்சி அடைந்த ஹனுமான் மனதளவில் அப்போதே தான் செல்ல வேண்டிய இடத்தில் இருந்தார். ஆயினும் தான் இன்னும் செய்ய வேண்டிய சில செயல்கள் இருப்பதாக அவர் நினைத்தார்.

சர்க்கம் 41

சுந்தர காண்டம் படிக்க வேண்டும் என்று தேடிய போது உங்கள் சைட் கிடைத்தது. அதில் தினசரி ஒரு காண்டம் வீதம் படித்து பின்னர் நீங்கள் வெளியிடும் சர்க்கத்தை உடனே படித்து வருகிறேன். நன்றாக எழுதி வருகிறீர்கள் நன்றி வணக்கம்.
ReplyDeleteதங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
Delete