ஹனுமானிடம் சூடாமணியைக் கொடுத்த பின் சீதை அவரிடம் கூறினார்:
"ராமர் அடையாளம் காண்பதற்காக நான் உன்னிடம் கொடுத்திருக்கும் இந்தச் சூடாமணி பற்றிய எல்லா விவரங்களும் அவருக்குத் தெரியும்.
"இந்த மணியைப் பார்த்த உடனேயே ராமருக்கு மூன்று பேரின் நினைவு வரும் - நான், அவருடைய தாய் மற்றும் அவர் தந்தை தசரதர்.
"ஓ உயர்ந்த வானரரே! உன்னிடம் இந்தப் பணியின் முதல் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்பது பற்றி நீ சிந்திக்க வேண்டும்.
"உயர்ந்த வானரரே! இந்தப் பணியைச் செய்து முடிப்பதில் முக்கிய பணி ஆற்ற வேண்டியது நீதான். நீ எப்போதும் பிரச்னைகளைப் பற்றி நன்கு சிந்தித்து விட்டுப் பிறகே செயலில் இறங்குவதால் உன் முயற்சிகள் வெற்றி அடையும்.
"ஓ ஹனுமான்! என் துயரங்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுவாயாக!"
வீரரான ஹனுமான் "அப்படியே ஆகட்டும்!" என்று விதேஹ நாட்டு இளவரசிக்கு பதில் கூறினார். தன் தலையைத் தாழ்த்தி சீதைக்கு வணக்கம் செலுத்தி விட்டு,, கிளம்புவதற்கு அவர் அனுமதியைப் பெறத் தயாராக நின்றார்.
பிறகு அந்த மிதிலை நாட்டு இளவரசி ஹனுமான் கிளம்பத் தயாராக இருப்பதைப் பார்த்து, பொங்கி வந்த அழுகையால் கம்மிய குரலில் பேசினார்:
"ஓ, ஹனுமான்! ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிக்கப்பட முடியாத ராமருக்கும், லக்ஷ்மணருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பாயாக.
"ஓ, உயர்ந்த வானரரே! சுக்ரீவருக்கும், அவருடைய அமைச்சர்களுக்கும், மற்ற வானரர்களுக்கும் முறையான விதத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பாயாக.
"வீரரான ராமர் என்னை இந்தத் துயரக் கடலிலிருந்து மீட்பதற்குத் தேவையான செயல்களை நீ மேற்கொள்ள வேண்டும்.

"உலகம் முழுவதும் கீர்த்தி பெற்ற ராமர் என்னை உயிருடன் பார்க்க இயல்வதற்கான விதத்தில் நீ பேச வேண்டும். இந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிப்பதால் கிடைக்கும் பெருமை உனக்கே சேரட்டும்.
"நீ கூறிய மகிழ்ச்சியூட்டும் சொற்களால் என்னிடம் வந்து சேர்வதற்கான ராமரின் முயற்சிகள் மேலும் மேலும் வலுப்படும் என்று புரிந்து கொள்கிறேன்.

"உன்னிடமிருந்து என்னைப் பற்றிய செய்தியைப் பெற்ற உடனேயே என் கணவர் ராமர், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த வீரம் மிகுந்த நடவடிக்கைகள் பற்றி ஆணைகள் பிறப்பிக்கப் போவது நிச்சயம்."
சீதையின் வார்த்தைகளைக் கேட்டதும் வாயுபுத்திரரான அந்த உயர்ந்த வானரர் கைகளைத் தலைக்கு மேல் வைத்து அவரை வணங்கியபடி கூறினார்:
"ராமர் எதிரிகளைப்போரில் வீழ்த்தி உங்களைத் துயரத்திலிருந்து மீட்கப் போகிறார். விரைவிலேயே குரங்குகளும் வானரங்களும் புடை சூழ உங்களை மீட்கும் பயணத்தை அவர் தொடங்கப் போகிறார்.
"மனிதர்களுக்குள்ளோ, தேவர்களுக்குள்ளோ, அவர் முன் நின்று அவர் வில்லிலிருந்து வெளிப்படும் அம்பு மழைகளுக்குத் தப்பி உயிர் பிழைக்கக் கூடிய யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அசுரர்களிலும் யாரும் இல்லை என்று நான் உறுதியாகக் கூறுவேன்.
"இந்தத் துணைவர்கள் யாரும் இல்லாமலே, போரில் சூரியன், இந்திரன், அக்னி, யமன் ஆகியோரைக் கூடத் தோற்கடித்து அவரால் தனியாகவே உங்களை மீட்க முடியும்.
"ஓ, ஜனகரின் மகளே, ராமரை எல்லா இடங்களிலும் வெற்றி அடையச் செய்யும் சக்தி நீங்கள்தான் என்று எல்லா வேத நூல்கள் மூலமும் நன்கு அறியப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான் அவர் கடல் சூழ்ந்த இந்த உலகை ஆளும் சக்தி படைத்தவராக இருக்கிறார்."
ஹனுமான் கூறிய இந்த சக்தி வாய்ந்த, உண்மையான, நன்கு எடுத்துரைக்கப்பட்ட, சமயத்துக்குப் பொருத்தமான வார்த்தைகளை மிகுந்த மரியாதையுடன் ஜனகரின் குமாரி கேட்டார்.
ஹனுமானின் வார்த்தைகள் ராமர் மீது அவருக்கு இருந்த அன்பினால் வெளிப்பட்டவை என்பதை அறிந்த சீதை அவர் கிளம்பத் தயாராயிருந்தபோது அவரிடம் இவ்வாறு கூறினார்:
"எதிரிகளை அழிப்பவனே! நீ விரும்பினால், இன்று ஒரு நாள் தனியான ஒரு இடத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டு உன் ஊர் திரும்பும் பயணத்தை நாளை மேற்கொள்ளலாம்.
"கடலைக் கடக்கும் வல்லமை உங்கள் மூவருக்குத்தான் இருக்கிறது.- காற்று, கருடன் மற்றும் நீ. வீரனே! எல்லாக் கடினமான நிலைமைகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்களுக்குள் நீதான் சிறந்தவன்.

"எனவே, இந்தக் கடினமான நிலையை வெற்றி கொண்டு நம் நோக்கத்தை நிறைவேற்ற நீ எந்த வழிகளைப் பின்பற்ற உத்தேசிக்கிறாய்?
"ஓ, எதிரிகளை அழிப்பவனே! இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வல்லமை படைத்தவன் நீ ஒருவன்தான். எதிரிகளை அழித்ததற்கான பெருமை உனக்கே சேரும்.
"போதுமான அளவு படைபலத்துடன் வந்து ராவணனை வென்று என்னைத் திரும்பவும் தன் நாட்டுக்கு அழைத்துச் செல்வதுதான் ராமருக்கும், எனக்கும் ஏற்றதாக இருக்கும்.

"எதிரிகளின் படைகளை அழிப்பவரான அவர் தன் அம்புகளால் இலங்கையை நிர்மூலமாக்கி என்னை இந்த நிலைமையிலிருந்து மீட்பது அவருடைய தகுதிக்கு ஏற்ற செயலாக இருக்கும்.
"எனவே அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட, போர்க்களத்தில் வீரம் காட்டுபவரான ராமரின் கண்ணியத்துக்கும், வீரத்துக்கும் உகந்ததை நீ செய்வாயாக.
தர்ம வழிக்கு உகந்த அந்த விலை மதிப்பற்ற வார்த்தைகளைக் கேட்ட ஹனுமான் தான் இன்னும் சொல்ல வேண்டியவற்றை அவரிடம் சொன்னார்:
"ஓ, சிறந்த பெண்மணியே! கரடிகள் மற்றும் வானரர்கள் சேனையின் தலைவரும் அவர்களை வழி நடத்துபவருமான சுக்ரீவர் உங்களை மீட்பதற்காகச் செயல்பட உறுதி பூண்டிருக்கிறார்.
"விதேஹ நாட்டு இளவரசியே! தன்னைச் சுற்றி கோடிக்கணக்கான வானரர்களைக் கொண்ட அவர் அரக்கர்களை அழிப்பதற்காக விரைவிலேயே இங்கே வருவார்.
"அவர் தலைமையில் உள்ள வானரர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் உறுதியான மனமும், துணிவும் கொண்டவர்கள். அவர்கள் தாங்கள் செய்ய நினைத்தத்தைச் செய்யும் வல்லமை பெற்றவர்கள் .
"அவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கக் கூடிய எந்த சக்தியும் வானத்திலோ, பூமியிலோ இல்லை. உயர்வான, பெரிய செயல்களை அவர்கள் புரியும்போது, அவர்கள் பலமும், வீரமும் அவர்களை எப்போதும் கை விடாது.
"காற்றில் பறந்து செல்லக் கூடிய பெரும் சக்தியும் வல்லமையும் படைத்த அவர்கள் உலகின் மலைகள், கடல்களில் ஆகியவற்றைக் கடந்து உலகம் முழுவதும் சென்று வந்துள்ளனர்.

"சுக்ரீவர் பக்கம் இருக்கும் அந்த வானரர்கள் எனக்குச் சமமானவர்கள் அல்லது என்னை விடச் சிறப்பானவர்கள். ஆனால் அவர்கள் யாரும் என்னை விடக் குறைந்த வல்லமை கொண்டவர்கள் அல்லர்.
"சாதாரணமாணவர்கள்தான் தூதர்களாக அனுப்பப்படுவார்கள், உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். ஒரு தூதனாக என்னாலேயே இங்கே வர முடிந்தது என்றால், என்னை விட அதிக சக்தி படைத்தவர்களால் எவ்வளவு சாதிக்க முடியும்!
"ஆகவே, உயர்ந்த பெண்மணியே! மனம் தளராதீர்கள். உங்கள் துயரத்தை விட்டொழியுங்கள். வீரம் மிகுந்த வானரர்கள் ஒரே தாவலில் இலங்கையை வந்தடைவார்கள்.
"அளவற்ற வலிமை கொண்ட, எழும் சூரியனையும் சந்திரனையும் ஒத்த, சிங்கங்களைப் போன்ற ராம லக்ஷ்மணர்கள் என் முதுகில் அமர்ந்து உங்களுக்கு அருகே வந்து சேர்வார்கள்.

"ஒருவரை விட்டு ஒருவர் பிரியாத இந்த இரண்டு வீர ஆத்மாக்களும் இந்த இலங்கை நகரத்துக்கு வந்து தங்கள் அம்புகளால் இதைத் தூள் தூளாக்குவார்கள்.
"அழகிய பெண்மணியே! ரகுகுலத்தை மகிழ வைக்க வந்த ராமர் ராவணனை அவன் எல்லா உறவினர்களுடனும் சேர்த்து அழித்து விட்டு உங்களுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லப் போகிறார்.

"எனவே ஆறுதல் கொள்ளுங்கள்.உங்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும். அந்த நல்ல காலத்துக்காகச் சிறிது காத்திருங்கள். எரியும் நெருப்பைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட ராமரை நீங்கள் சீக்கிரமே பார்க்கப் போகிறீர்கள்.
"இந்த அரக்க குல அரசன் அவனுடைய மகன்கள், அமைச்சர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அழிக்கப்பட்டதுமே, ரோகிணிதேவி சந்திரனுடன் சேர்வது போல், நீங்கள் ராமருடன் சேரப் போகிறீர்கள்.
"மிதிலை நாட்டு இளவரசியே! விரைவிலேயே நீங்கள் உங்கள் துயரக் கடலைக் கடந்து மறுகரையை அடைவீர்கள். ராவணன் ராமரால் கொல்லப்படுவதையும் நீங்கள் அதி விரைவிலேயே காண்பீர்கள்.
விதேஹ நாட்டு இளவரசியான சீதைக்கு இவ்வாறு ஆறுதல் கூறிய பிறகு, ஹனுமான் தான் திரும்பிச் செல்ல விரும்புவதை மீண்டும் அவரிடம் தெரிவித்தார். அவர் மீண்டும் கூறினார்:
"இலங்கையின் வாயிற்கதவுக்கருகே, எல்லா எதிரிகளையும் அழிப்பவரான வீரரான ராமரை லக்ஷ்மணருடனும், கையில் வில்லுடனும் நீங்கள் விரைவிலேயே காண்பீர்கள்.
"மலையைப் போன்ற பெரிய உருவத்துடன் மேகங்களைப் போல் தோற்றமளிக்கும், நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்ட, அளவில் யானையைப் போன்றும், தைரியத்தில் சிங்கங்கள், புலிகள் போன்றும் விளங்குபவர்களுமான வீரம் மிகுந்த வானரர்களின் சேனை இலங்கையில் மலய மலையின் பள்ளத்தாக்குகளைத் தங்கள் இடி முழக்கம் போன்ற கர்ஜனையால் நிரப்புவதை நீங்கள் விரைவிலேயே பார்ப்பீர்கள்.
"தன் இதயத்தின் மையப்பகுதி அன்புக்கணைகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள அந்த வீரமுள்ள ராமருக்கு சிங்கத்தினால் துன்புறுத்தப்பட்ட யானையைப் போல் சிறிது கூட மகிழ்ச்சி இல்லை.
"ஓ, உயர்ந்த பெண்மணியே! அழாதீர்கள்.உங்கள் மனம் துயரத்தால் வேதனைப்படாமல் இருக்கட்டும். இந்திராணி இந்திரனுடன் இணைந்திருப்பது போல் நீங்கள் ஏற்கெனவே உங்கள் கணவருடன் இணைந்திருப்பதாக நம்புங்கள் (நடக்கப் போகிறவை பற்றி நான் அவ்வளவு நிச்சயமாக இருக்கிறேன்.)
"ராமரை விட உயர்ந்தவர் யார்? சுமித்திரையின் புதல்வரான லக்ஷ்மணருக்குச் சமமானவர் யார்? காற்றையும், நெருப்பையும் போல் இவர்கள் இருவரும் உங்கள் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்.
"ஓ, நல்ல பெண்மணியே! அரக்கர்கள் வசிக்கும் இந்த மோசமான இடத்தில் நீங்கள் அதிக நாட்கள் இருக்க வேண்டி இருக்காது. உங்கள் கணவரின் வருகை அதிக தாமதமாகாது. நான் அவரிடம் திரும்பிச் செல்லும் வரை பொறுமையாக இருங்கள்."

Keep up the good work!
ReplyDeleteThank you.
Delete