சீதை கூறிய வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அந்த உயர்ந்த வானரர் தர்மத்தின் அடிப்படையிலான அந்தப் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார். அவர் இவ்வாறு பதில் உரைத்தார்:
"ஓ, உயர்ந்த சீதையே! நேர்மையான செயல்பாடு பற்றி நீங்கள் ஒரு உபதேசமே செய்திருக்கிறீர்கள்.

"நீங்கள் சொன்னது கணவரிடம் விஸ்வாசமாக இருக்க உறுதி பூண்ட ஒரு பெண்ணின் இயல்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறது.
"பெண்மைக்குரிய உங்கள் மென்மையான இயல்பு நூறு யோஜனை அகலம் உள்ள இந்தக் கடலின் மீது நீங்கள் என்னால் தூக்கிச் செல்லப்படும் கடினமான அனுபவத்தைத் தாங்குவதை அனுமதிக்காது.
"நற்குணங்களுக்குப் பெயர் பெற்ற ஜனக குமாரியே! ராமரைத் தவிர வேறு யாரும் உங்களைத் தொட அனுமதிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் சொன்ன இரண்டாவது காரணம் அந்த உயர்ந்த மனிதரின் மனைவியின் வாயிலிருந்து வந்தது பொருத்தமானதுதான்.
"ஓ, சிறந்த பெண்மணியே, உங்களைத் தவிர வேறு யார் தர்மத்தின் வழியிலான நடத்தை பற்றி இவ்வாறு விளக்க முடியும்!
"ஓ, உயர்ந்த பெண்மணியே!, நீங்கள் என்னிடம் சொன்னதையும், என் கண் முன் நீங்கள் செய்ததையும் காகுஸ்த குல திலகரான ராமரிடம் நான் உடனே சென்று தெரிவிப்பேன்.
"ஓ, உயர்ந்த பெண்மணியே! ராமர் மீது நான் கொண்டுள்ள அதீத அன்பினாலும் அவருக்குப் பிரியாமனதையும், நன்மை பயப்பதையும் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினாலும்தான் நீங்கள் என்னுடன் வர வேண்டும் என்ற யோசனையை நான் சொன்னேன்.

"கடலைக் கடந்து இலங்கைக்குள் நுழைவது எவருக்கும் கடினமானது என்பதாலும் என் சக்தியின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையாலும்தான் நான் உங்களிடம் இவ்வாறு கூறினேன்.
"உங்களை ராமருடன் உடனே சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. எனவே பெரியவர்களிடம் எனக்கு இருக்கும் அன்பினாலும் மரியாதையாலும், உங்களிடம் இந்த யோசனையைச் சொன்னேன். அதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.
"ஓ, தூய்மையான பெண்மணியே! நீங்கள் என்னுடன் வர விரும்பாததால், நான் ராமரிடம் தெரிவிக்கப் போகும் செய்தி அவரிடம் நம்பிக்கை ஊட்டுவதற்கு அடையாளப் பொருள் ஏதாவது கொடுங்கள்."
ஹனுமான் இவ்வாறு கூறியதும், தேவலோகப் பெண் போன்று தோற்றமளித்த சீதை சில விஷயங்களை நினைத்துக் கண்களில் நீர் பெருகியவராக இவ்வாறு கூறினார்.
"ராமருக்குத் தெரிந்த, அவருக்கு இன்னும் நினைவிருக்கக் கூடிய சில விஷயங்களைப் பற்றி நான் உன்னிடம் கூறப் போகிறேன். இந்த விஷயங்களை நான் உன்னிடம் கூறப்போகும் அதே வார்த்தைகளில் அவரிடம் சொல்:
"ஒருமுறை சித்திரகூட மலையின் வடகிழக்குப் பகுதியில் மந்தாகினி நதிக்கு அருகில் நாம் வசித்து வந்தபோது, சித்தாசிரமத்தில் நீர்நிலைகளிலும் பூக்கள், பழங்கள், கிழங்குகள் மிகுந்த பசுமையான நிலங்களிலும் நாம் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்போம்.
"நீண்ட நேரம் விளையாடிய பிறகு, நீங்கள் களைத்துப் போய் ஆசிரமத்துக்கு வந்து உங்கள் தலையை என் மடி மீது வைத்துப் படுத்துக் கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தீர்கள்.
"அப்போது மாமிசம் உண்பதில் ஆசை கொண்டிருந்த ஒரு காகம் அங்கே காய வைத்திருந்த மாமிசத்தைத் தன் கூரிய அலகால் கொத்தியது. அதை பயமுறுத்தி விரட்டுவதற்காக நான் ஒரு மண்கட்டியை எறிந்தேன்.

"பசி மிகுந்த அந்தக் காகம் அந்த மாமிசத்தை விட்டு விட்டு பயந்து ஓடுவதற்கு பதில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து அதன் அலகினால் என்னைக் கொத்த ஆரம்பித்தது.
"இவ்வாறு அந்தக் காகத்தால் தொந்தரவு செய்யப்பட்டதும், நான் அதைத் துரத்துவதற்காக என் இடுப்புப் பட்டையைக் கழற்றினேன். அதனால் என் உடை தளர்வடைந்தது.

"தற்செயலாகக் கண் விழித்த நீங்கள் என்னை அந்த நிலையில் பார்த்தீர்கள். பிறகு நீங்கள் என்னைக் கேலி செய்து சிரித்தீர்கள்.
"நான் மிகவும் கோபம் அடைந்தேன். காகம் என்னைக் குத்தியதால் சோர்வடைந்து போயிருந்தேன். அவமானத்தினால் உங்கள் மடியில் அமர்ந்தேன். கோபமமாக இருந்த என்னை நீங்கள் சமாதானப்படுத்தினீர்கள்.
"நான் கண்ணீர் சிந்தியபடி என் கண்களைத் துணியால் துடைத்துக் கொண்டதைப் பார்த்த நீங்கள், நான் அந்தக் காகத்தின் தாக்குதலால் எந்த அளவுக்கு மனம் வருந்தினேன் என்பதைப் புரிந்து கொண்டீர்கள்.
"களைப்படைந்திருந்ததால் உங்கள் மடியில் தலை வைத்து நான் சற்று நேரம் தூங்கினேன். அதற்குப் பிறகு நீங்கள் என் மடியில் தலை வைத்துத் தூங்கினீர்கள். அப்போது அந்தக் காகம் மீண்டும் என்னிடம் வந்தது.
"நான் அப்போதுதான் தூங்கி முடித்து வலியுடன் எழுந்தேன். அப்போது அந்தக் காகம் மீண்டும் திடீரென்று என் மார்பில் தாக்கியது. அந்தக் காகம் பலமுறை என்னைக் காயப்படுத்தியது. என் உடலிலிருந்து ரத்தம் ஒழுகி உங்கள் உடலை நனைத்தது.
"இவ்வாறு அந்தக் காகத்தால் துன்பப்படுத்தப்பட்டதால் என் மடியில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த உங்களை நான் எழுப்பினேன்.

"என் மார்பில் காயம் ஏற்பட்டிருந்ததைப் பார்த்ததும், ஓ, வீரரான ராமரே, சீண்டப்பட்டதால் சீற்றம் கொண்ட பாம்பைப் போல் நீங்கள் என்னைக் கேள்வி கேட்க ஆரம்பித்தீர்கள்.
" 'ஓ, அழகான பெண்ணே! உன் மார்பில் காயம் ஏற்படுத்தியது யார்? ஒரு ஐந்து தலை நாகத்தோடு விளையாடுவது யார்?' இவ்வாறு என்னிடம் கேட்ட பிறகு நீங்கள் சுற்று முற்றும் பார்த்தபோது தன் அலகும், கால்களும் ரத்தத்தில் ரத்தத்தில் தோய்த்தெடுத்தது போல் ஒரு காகம் என்னைப் பாரத்துக் கொண்டு நின்றதைப் பார்த்தீர்கள்.
"அந்தக் காகம் இந்திரனின் பிள்ளை. பறவைகளின் தலைவன். வேகத்தில் அது காற்றுக்கு நிகரானது. எனவே அது கணநேரத்தில் பூமிக்குள் மறைந்து விட்டது.
"அதற்குப் பிறகு, நீங்கள் கோபத்தினால் விழிகளை உருட்டியபடி அந்தக் காகம் குறித்து ஒரு பயங்கரமான சபதம் செய்தீர்கள்.
"ஆசனத்துக்காகப் போடப்பட்டிருந்த தர்ப்பையிலிருந்து ஒரு புல்லை எடுத்துக் கொண்டு அதில் பிரம்மாஸ்திரத்தை ஜபித்து அதை அந்தப் பறவையின் மீது செலுத்தத் தயாரானீர்கள். அது யுகம் முடியும் தருவாயில் கொழுந்து விட்டு எரியும் தீயைப் போல் ஜொலித்தது.
"அந்த எரியும் அஸ்திரத்தை நீங்கள் அந்தக் காகத்தை நோக்கி வீசினீர்கள். அந்தக் காகம் வானில் பறந்தபோது, அந்த அஸ்திரம் அதைத் துரத்தியது. உயர்ந்த நிலையில் இருந்த பலரிடமும் பாதுகாப்புக் கோரியபடி அது எல்லாப் பகுதிகளிலும் பறந்து சென்று எல்லா இடங்களிலிருந்தும் உதவி கோரியது.
"மூன்று உலகங்களிலும் திரிந்த பிறகு, மகரிஷிகளாலும், தேவர்களாலும் அதன் தந்தையான இந்திரனாலும் கூட உதவி மறுக்கப்பட்ட பின், இறுதியில் அது திரும்பி வந்து உங்கள் காலடியில் அடைக்கலம் கோரியது.
"ராமபிரானே, உங்களிடம் அடைக்கலம் கோருபவர்கள் எதிர்களேயானாலும், நீங்கள் அவர்களைக் காப்பது வழக்கம். அந்தக் காகம் கொல்லத் தகுந்தது என்ற போதும், கீழே விழுந்து அடைக்கலம் கோரி உங்கள் காலில் விழுந்த அந்தக் காகத்துக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்தீர்கள்.
"எந்த வழியும் காண முடியாமல் உங்களிடம் திரும்பி வந்த முக்கியத்துவமற்ற அந்த ஜீவனைப் பார்த்து, 'இந்த பிரம்மாஸ்திரம் வீணாகப் போக முடியாது. நான் அதை என்ன செய்ய வேண்டும் என்று சொல்' என்று நீங்கள் கேட்டீர்கள்.
"அப்போது அந்தக் காகம் கூறியது: 'அப்படியானால் அந்த அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்.' அந்த அஸ்திரமும் அவ்வாறே செய்தது.

"அதன் வலது கண் அழிக்கப்பட்டாலும், அந்தக் காகம் தன் இடது கண் பாதிக்கப்படாமல் தப்பியது. அதற்குப் பிறகு காகங்களுக்கு ஒரு கண்தான் இருக்கிறது என்பது எல்லோரும் அறிந்தது (மற்றொரு கண் மாறு கண்ணாக இருக்கும்.)
"பிறகு அந்தக் காகம் உங்களுக்கும் தசரதருக்கும் வணக்கம் தெரிவித்தது. உங்கள் அனுமதி பெற்று அது வீடு திரும்பியது.
"உலகங்களின் தலைவரே! எனக்காக நீங்கள் ஒரு காகத்தின் மீது கூட பிரம்மாஸ்திரத்தை ஏவினீர்கள்.அப்படி இருக்கும்போது என்னை உங்களிடமிருந்து கடத்தி வந்தவனை நீங்கள் ஏன் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
"ஓ, மனிதர்களுக்குள் மேலானவரே! இவ்வளவு சக்தி படைத்திருக்கும் நீங்கள், உங்களை என் கணவராகவும், பாதுகாவலராகவும் கொண்டிருக்கும், இப்போது எஜமானர் இல்லாத நிலைக்கு ஆளாகியிருக்கும் என் மீது கருணை கொள்ளுங்கள்.
"மற்றவர்களின் துயரத்தைப் போக்குவதும், அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவுவதும்தான் மிக உயர்ந்த தர்மச் செயல்கள் என்று நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

"என் கணவரான உங்களை அளவற்ற சக்தியும், ஊக்கமும் உள்ளவராகவும், செய்ய இயலாதவை என்று கருதப்படும் செயல்களைச் செய்து முடிப்பவராகவும், எதற்கும் கலங்காதவராகவும், கடலைப் போன்ற ஆழம் உள்ளவராகவும், இந்த உலகம் முழுவதற்கும் தலைவராக விளங்குபவரின் கம்பீரம் உள்ளவராகவும் நான் அறிந்திருக்கிறேன்.
"இவ்வாறு எல்லா சாஸ்திரங்களிலும் விற்பன்னராகவும், உண்மையானவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் இருந்தும் ரகுகுல திலகரான ராமர் ஏன் தன் அஸ்திரங்களை அரக்கர்கள் மீது செலுத்தவில்லை?
"எந்த ஒரு நாகரோ, கந்தர்வரோ, அசுரரோ அல்லது மருத்தோ ராமருடன் மோதும் அளவுக்கு சக்தி படைத்தவர் அல்ல. என் நலத்தில் அவருக்குச் சிறிதளவாவது அக்கறை இருக்குமானால் அவர் ஏன் தன் கூர்மையான ஆயுதங்களினால் அரக்கர்களை அழிக்கவில்லை?
"எதிரிகளுக்கு அச்சத்தை விளைவிப்பவரான சக்தி மிக்க, வீரம் நிறைந்த லக்ஷ்மணர் ஏன் என்னை இந்த நிலையிலிருந்து மீட்க அவருடைய சகோதரரின் அனுமதியைப் பெறவில்லை?
"காற்றைப் போலவும், நெருப்பைப் போலவும் சக்தி உள்ளவர்களாக இருந்தும், மனிதர்களுக்குள் சிங்கங்களாக இருக்கும் இந்த இருவரும் தேவர்களால் கூட வெல்ல முடியாதவர்களாக இருந்தும் ஏன் என்னைக் கைவிட்டு விட்டார்கள்?
"எந்த எதிரியும் வீழ்த்தக் கூடிய வீரர்களாக இருந்தும் அவர்கள் என் நிலைமையைப் பற்றி அறிந்து கொள்வதில் கூட அக்கறை கூடக் காட்டவில்லை. இதற்கு நான் செய்த பாவம் காரணமாக இருக்கலாம்."
கண்களில் நீர் மல்க விதேஹ நாட்டு இளவரசி பேசிய இந்தப் பரிதாபம் ஏற்படுத்தும், மனதைத் தொடும் சொற்களைக் கேட்டதும் வாயுபுத்திரரான வீர ஹனுமான் இவ்வாறு கூறினார்:
"ஓ, உயர்ந்த பெண்மணியே! உங்கள் பொருட்டுத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ராமருக்கு வேறு எதிலும் ஆர்வமில்லை என்பதை நான் உங்களிடம் சத்தியம் செய்து சொல்கிறேன். ராமர் இவ்வாறு சோகத்தில் மூழ்கியிருக்கும்போது, லக்ஷ்மணரும் அதே விதமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.
"ஓ, புனிதம் வாய்ந்தவரே! அதிர்ஷ்டவசமாக நீங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறீர்கள். இது துயரப்படுவதற்கான நேரமல்ல. ஏனெனில், உங்கள் துயரத்தின் முடிவு கண்ணுக்குத் தெரிகிறது.
"உங்களைக் கண்டுபிடிப்பதற்காகச் சோர்வின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கும்அந்த இரண்டு சக்தி வாய்ந்த சிங்கம் போன்ற வீரர்கள் இந்த இலங்கை நகரத்தைச் சாம்பலாக்கி விடுவார்கள்.
"அழகிய பெண்மணியே! ராமர் ராவணனை, அவனுடைய எல்லா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போரில் அழித்து உங்களை அவருடைய நகரத்துக்குத் திரும்ப அழைத்துப் போகப் போகிறார்.
" ராமபிரானிடமும், சக்தி வாய்ந்த லக்ஷ்மணரிடமும், தைரியம் மிக்க சுக்ரீவரிடமும் நான் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள்."
ஹனுமானின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்ட பிறகும் ஒரு தேவலோகப் பெண் போன்ற தேஜஸுடன் விளங்கிய சீதை தொடர்ந்து துயர மனநிலையிலேயே இருந்தார். அந்த வானரத் தலைவரிடம் அவர் இவ்வாறு கூறினார்:
"இந்த உலகைக் காப்பதற்காக கௌசல்யா பெற்றெடுத்த அந்த உயர்ந்த உள்ளம் கொண்டவருக்கு என் மரியாதை மிகுந்த வணக்கங்களைத் தெரிவியுங்கள். அவருடைய நலம் பற்றி நான் விசாரித்ததாக அவரிடம் சொல்லுங்கள்.
"காட்டில் ராமருக்கு சேவை செய்து கொண்டு தர்மவானான லக்ஷ்மணர் இருக்கிறார். அவரை ஈன்றெடுத்ததன் மூலம் சுமித்ரை ஒரு கீர்த்தியுள்ள மகனின் தாயாகி விட்டார்.
"மலர் மாலைகள், ரத்தினங்கள், அன்பு காட்டும் அழகிய பெண்கள், உலகில் பெறக் கடினமான பெரும் செல்வங்கள், சுகங்கள் இவை அனைத்தையும் துறந்து விட்டு தன் தாயையும், தந்தையையும் வணங்கி விட்டு அவர் ராமரைப் பின் தொடர்ந்து வந்தார்.
"சிங்கத்தைப் போன்ற தோள்களைக் கொண்ட உயர்ந்த உள்ளம் கொண்ட அந்த மனிதர் எனக்கும் ராமருக்கும் அவருடைய தாய் தந்தையருக்குச் சேவை செய்வது போல் சேவை செய்தார்.
"நான் கடத்தப்பட்டபோது லக்ஷ்மணர் என் அருகில் இல்லை. அவர் பெரியோர்களுக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைபவர். அவர் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர், குறைவாகப் பேசுபவர்.

"அவர் என் மாமனாரான தசரத மகாராஜாவுக்கு நிகரானவர். ஒரு சகோதரராக அவர் ராமருக்கு என்னை விடவும் அதிகமாகச் சேவை புரிந்து வந்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் பிரியமான இளவரசர்.
"அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதில் ராமர் இறந்து போன தன் தந்தையைக் கூட மறந்து விடும் அளவுக்கு அவர் ராமருக்குப் பிரியமானவர்.

"தனக்கு எந்தப் பணி கொடுக்கப்பட்டாலும், அதை மிகவும் பொருத்தமான விதத்தில் நிறைவேற்றும் திறமை படைத்தவர் அவர்.
"ராமருக்குப் பிரியமானவரான, அவருக்கு மிகவும் கீழ்ப்படிந்தவரான, எல்லா விதத்திலும் திறமை வாய்ந்த, ஒரு நண்பரைப் போன்ற விசுவாசம் கொண்ட அந்த லக்ஷ்மணரை நான் கனிவுடன் விசாரித்ததாக நீ தெரிவிக்க வேண்டும்.
"ஓ, உயர்ந்த வானரரே! என்னுடைய இந்தத் துன்பமான நிலையிலிருந்து என்னை மீட்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் ராமர் எடுக்கப் போகிறார் என்பதற்கான உறுதியாக நீ விளங்குகிறாய்,
"உன் முயற்சிகளாலும், எடுத்துச் சொல்லாலும், என் பொருட்டான இந்த விஷயத்தில் ராமர் செயல்பட வைக்கப்பட வேண்டும். என் பிரபுவும், எஜமானருமான வீரமிக்க ராமரிடம் நான் இப்போது உன்னிடம் சொல்லப் போவதைச் சொல்வாயாக.:
"ஓ, தசரதரின் குமாரரே! நான் ஒரு மாதம் மட்டும்தான் என் உயிரை வைத்திருப்பேன் என்று சொல்லும்போது, உங்களிடம் நான் உண்மையாகச் சொல்லுகிறேன். அதற்கு மேல் நான் உயிரை வைத்திருக்க மாட்டேன்.
"வீரரே! கௌசிகி பாதாள உலகத்திலிருந்து மீட்கப்பட்டது போல் இந்தத் தீய எண்ணம் கொண்ட அற்ப ராவணன் என்னை வைத்திருக்கும் சிறையிலிருந்து என்னை விடுவிக்க மனம் வையுங்கள்."
பிறகு சீதை தன் உடையிலிருந்து சூடாமணி என்ற அந்த விலையுயர்ந்த ரத்தினக் கல் மோதிரத்தை அவிழ்த்து "இதை ரகு குல திலகரான ராமரிடம் கொடுங்கள்" என்று சொல்லி அதை ஹனுமானிடம் கொடுத்தார்.
வீரரான ஹனுமான் அந்த ஒப்பற்ற ஆபரணத்தை சீதையிடம் பெற்றுக் கொண்டு அதைத் தன் விரலில் அணிந்து கொண்டார். அது அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது.
அந்த ஆபரணத்தை அணிந்து அந்த உயர்ந்த வானரர் சீதையை வலம் வந்து அவர் முன் வந்து நின்று கைகளைக் கூப்பி அவரை வணங்கினார்.

"சீதையைக் கண்டு பிடித்ததால் அதிக மகிழ்ச்சியுடன் இருந்த அவர் உடலால் மட்டும்தான் அங்கே இருந்தார். அவர் மனம் ஏற்கெனவே ராமர் இருந்த இடத்துக்குப்போய் விட்டது.
சீதை அணிந்திருந்த அந்த ஆபரணத்தை பக்தியுடன் யாரும் பார்க்காமல் அவர் வாங்கிக் கொண்டு விட்டார். பெரும் காற்று அடித்துச் சென்ற பிறகு அமைதி அடைந்த மலையைப் போல் அமைதியாக இருந்த அவர் மனம் இப்போது இலங்கையிலிருந்து திரும்ப வேண்டியது குறித்த சிந்தனையில் இருந்தது.

சூடாமணி கொடுத்த படலம் அருமை!
ReplyDeleteThank you.
Delete